Showing posts with label Selvaraagavan. Show all posts
Showing posts with label Selvaraagavan. Show all posts

Tuesday, June 16, 2015

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!


செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 17ம் தேதி மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, டாப்ஸி, கத்ரீன் தெரஸா, ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். படத்திற்கு 'கான்' என்ற தலைப்பை இறுதிப்படுத்தி வைத்தார்கள். படத்தின் முக்கிய காட்சிகள் சிலவற்றை காட்டுக்குள் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், "சிம்பு நடித்து வரும் 'கான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்" என்று இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
இப்படத்தில், சிம்பு முருக பக்தராக நடித்து வருகிறார். 'கான்' என்றால் 'காடு' என்று அர்த்தம். போலீஸ் அதிகாரியாக டாப்ஸி நடித்து வருகிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.