Showing posts with label Shamili. Show all posts
Showing posts with label Shamili. Show all posts

Monday, June 15, 2015

விஜயின் தங்கையாக ஷாமிலி!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் ஃபேண்டஸி திரைப்படம்புலி’ . ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா நடித்து வரும் இப்படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசருக்காக காத்திருக்கும் தருவாயில் அடுத்த கட்ட தகவலாக படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் ஷாமிலி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் ஷாமிலி சுதீப்புக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.

ஷாலினியின் தங்கையும், அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி, ராஜநடை படம் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அஞ்சலி' படம் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருது பெற்றவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்படத்தில் தபுவுக்கு தங்கையாக நடித்ததோடு பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடித்தார். கடைசியாக 2009ல் தெலுங்கில் வெளியான ஓய் படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்பு ஏதும் இல்லை. தற்போதுபுலிபடம் மூலம் மீண்டும் தமிழில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார்.