ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்துக்கு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் உடன்நடிக்கும் நடிக நடிகையரை ஒப்பந்தம் செய்யும் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. அதனால் அதுபற்றி நாள்தோறும் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன.
படத்தில் இருக்கும் இன்னொரு முக்கியவேடத்தில் ஹாலிவுட்நடிகர் அர்னால்டு நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அவருக்கு முன்னால் இந்தப்படத்தில் நடிக்க ஷாருக்கானிடம் பேசியாகச் சொல்லப்பட்டது. அந்த வேடத்தில்தான் இப்போது அர்னால்டு நடிக்கிறார் என்று சொல்கிறார்கள். அர்னால்டு கேட்டுவிட்டு ஒப்புக்கொள்ளும் ஒரு வேடத்தில் நடிக்க ஷாருக்கான் மறுத்துவிட்டாரே என்கிற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு.
அவர் ஏன் நடிக்க மறுத்தார் என்பதுபற்றி சுவாரசியமான செய்திகள் அடிபடுகின்றன. இதை உறுதிப்படுத்த யாரும் முன்வரமாட்டார்கள் என்றபோதும், சிலர் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் இந்தச்செய்தியை சினிமாவிகடன் வாசர்களுக்காகத் தருகிறோம். இந்தப்படத்தில் நடிக்கவேண்டும் என்று ஷாருக்கானை அணுகியபோது, எந்த வேடத்தில் யார் நடிப்பது என்பது பற்றி எதையும் சொல்லாமல், படத்தின் மொத்தக்கதையையும் சொல்லியிருக்கிறார்கள்.
கதையைக் கேட்டு முடித்தவுடன், இந்தவேடத்தில் நான் நடிக்கிறேன் என்று ஒருவேடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னாராம் ஷாருக். அவர் நடிக்கிறேன் என்று சொன்னவேடத்தில்தான் ரஜினி நடிக்கிறாராம். அதன்பின் அதைத்தான் ரஜினி செய்கிறார் என்று சொன்னார்களாம்.

ஷாருக் முதலிலேயே அந்தவேடத்தின் மீது ஆசை கொண்டுவிட்டபிறகு அவரை வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தால் நன்றாக இருக்காது என்று படக்குழுவினரே விட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது
No comments:
Post a Comment