Saturday, July 4, 2015

‘பாபநாசம்’ படத்தில் நடிக்க மறுத்த ரஜினி! பரபரப்பு தகவல்கள்


மலையாளத்தின் சூப்பர்ஹிட் படமான த்ரிஷ்யம், தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் நேற்று வெளியானது.
த்ரிஷ்யம் படத்தைத் தமிழில் பண்ணும் வாய்ப்பு முதலில் ரஜினிக்குக் கிடைத்ததாக தகவல் வந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட இரண்டு காட்சிகளைத் தனது ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் நடிக்க மறுத்துள்ளார் ரஜினி.
ரஜினிக்குக் கதை மிகவும் பிடித்துப்போனது. ரஜினி நடித்தால் படத்துக்கு வித்தியாசமான பரிமாணம் கிடைக்கும் என்றும் இயக்குநர் ஜீத்தும் நினைத்துள்ளார். ஆனால் இரண்டு காட்சிகள்தான் ரஜினி நடிக்கத் தடையாக அமைந்தன.
போலீஸாரால் ஹீரோ மிகவும் தாக்கப்படுவது மற்றும் கிளைமாக்ஸ் ஆகிய இந்த இரு காட்சிகள் தான் ரஜினிக்குத் தடங்கலாக இருந்துள்ளன. தான் தாக்கப்படுவதை ரசிகர்கள் விரும்புவார்களா என்று யோசித்துள்ளார். இதுபற்றி ரஜினியுடன் விவாதித்த ஜீத்துவுக்கும் அது சரியென பட்டதால் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றவேண்டாம் என இருவரும் முடிவெடுத்துள்ளார்கள்.
அடுத்தமுறை (ரஜினிக்கேற்ற) புதுக்கதையுடன் சந்திப்பதாக ஜீத்து கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment