Saturday, July 4, 2015

ரஜினி ஏன் நடிக்கவில்லை? - 'பாபநாசம்' இயக்குநர் விளக்கம்


'த்ரிஷ்யம்' படத்தைப் பார்த்துவிட்டு, அப்படத்தில் ஏன் ரஜினி நடிக்கத் தயங்கினார் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்திருக்கிறார்.
கமல், கெளதமி, நிவேதா தாமஸ், ஆஷா ஷரத், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'பாபநாசம்'. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்காகும். ஜிப்ரன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ராஜ்குமார் தயாரித்திருக்கிறார்.
'பாபநாசம்' படத்துக்கு விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால், இப்படத்தை முதலில் ரஜினியிடம் தான் திரையிட்டு காட்டியிருக்கிறார்கள்.
'த்ரிஷ்யம்' ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் அப்படத்தில் நடிக்க ரஜினியும் விருப்பம் காட்டவில்லை, இயக்குநரும் ரஜினியை நாயகனாக்க விரும்பவில்லை.
அதற்கான காரணம் என்ன என்று கேள்விக்கு, "ரஜினிக்கும் எனக்கும் இரண்டு காட்சிகள் சரியாக இருக்குமா என்று யோசிக்க வைத்தது. ஒன்று நாயகனை போலீஸ் ஸ்டேஷனில் அடிக்கும் காட்சி, ஒரு போலீஸ் நாயகனின் முகத்தில் ஷூவால் மிதிப்பார். அடுத்து க்ளைமாக்ஸ் காட்சி. இந்த இரண்டையும் ரஜினி ரசிகர்கள் ஏற்பார்களா என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. ரஜினிக்கும் அந்த தயக்கம் இருந்தது" என்று தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment