Tuesday, June 30, 2015

தமிழ் சினிமா 2015 ல் - 107-ல் 11 படங்களே ஹிட்!

இந்த ஆண்டு ஜூன் 26 வரை தமிழில் 107 படங்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு சாதனை. ஆனால் இவற்றில் மொத்தம் 11 படங்களே ஹிட் என்று சொல்லக் கூடிய அளவில், தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளன. 4 படங்கள் தயாரிப்பு செலவை மட்டும் சம்பாதித்துள்ளன. இந்த அரையாண்டில் 13 சதவீதம் ஹிட் படங்களாக உள்ளன. கடந்த ஆண்டு இது வெறும் 8 சதவீதமாக இருந்தது.
அரையாண்டின் சிறப்பம்சங்கள்
# காக்கா முட்டை, 36 வயதினிலே, டிமாண்டே காலனி ஆகிய படங்கள் சம்பாதித்த லாபத்தைப் பார்க்கும்போது, 'சிறியதே அழகு' என்பதே வெற்றிக்கான மந்திரமாக இருக்கும் போல தெரிகிறது. பெரிய நட்சத்திரங்கள் இன்றி, குறைந்த பட்ஜெட்டில் (ரூ.2.5 கோடி முதல் ரூ.5 கோடி வரை) சிறப்பாக எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இது ஒரு புதிய போக்காக உருவாகியுள்ளது.
# தயாரிப்பு செலவில் பாதியை சம்பளமாகப் பெறும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் (உத்தமவில்லன், மாஸு என்கிற மாசிலாமணி) வசூலில் எடுபடாமல் போனது. இதன் மூலம், படங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்களின் சம்பளம் குறையவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
# ராகவா லாரன்ஸின் சம்பளத்துடன் சேர்த்து ரூ.18 கோடியில் எடுக்கப்பட்ட காஞ்சனா 2, மாபெரும் வெற்றிப் படமாக ஆனது.
# படத்துக்கான ஓப்பனிங் நன்றாக இருக்க வேண்டுமென்றால் சிறப்பாக விளம்பரப்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதில் பெரிய ஹீரோக்களின் படங்களும், சிறிய பட்ஜெட் படங்களும் வெவ்வேறு முறையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பாலிவுட்டைப் போல பெரிய நட்சத்திரங்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் படங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.
# தொலைக்காட்சி உரிமம் என்ற சந்தை முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. அதிக படங்கள் தயாரிக்கப்படுவதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் படங்களை வாங்குவதை நிறுத்தியுள்ளன. படங்களின் தொலைக்காட்சி உரிமம் அதிக விலைக்கு விற்கப்படுவதும், படங்களை ஒளிபரப்பினால் வரும் வருமானம் குறைந்துள்ளதுமே இதற்கு காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்த வருடம் வெற்றி பெற்ற 3 படங்களின் தொலைக்காட்சி உரிமம் இன்னும் விற்கப்படாமலேயே உள்ளன.
# அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் தமிழ் படங்களின் வெளிநாட்டு விநியோக சந்தை 10 - 15 சதவீதம் உயர்ந்துள்ளது. மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய வசூல் இதற்கு ஓர் உதாரணம். அதே நேரத்தில், பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் தோல்விகளால், ஒரு காலத்தில் லாபகரமாக இருந்த தெலுங்கு டப்பிங் உரிமையும் தற்போது அடிவாங்கியுள்ளது. இந்த வருடம் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியடைந்த ஒரே படம் காஞ்சனா 2

A Hi-tech release for 'Baahubali' in USA

'Baahubali' - India's biggest motion picture is all set for a grand worldwide release on July 10. The film will be arriving in India in more than 4000+ screens. The film is also getting a grand release in USA on July 9th with premieres in about 200 locations including Telugu and Tamil.
This will be the first time Cinemak is giving about 10 XD screens (giant big screens) in USA for an Indian movie so that audience can have a real visual treat with 'Baahubali' as never seen before. In addition, the film will also be released in another 10 Big D screens in Carmike with 7.1/5.1 Audio. Cinemark is also releasing the film in limited Dolby ATMOS screens since only few of them are available in USA where Indian movies usually get screened.
Cinemark will be publishing the list of XD, Big D, eMax and Dolby ATMOS screens list soon. The online ticketing for 'Baahubali' in most of these locations will open on July 1st.
So, why are you waiting? Book your tickets soon before they get sold out. Get ready for a visual treat in 'Baahubali' on big screens.

Illayathalapathy Vijay's 'Puli' Audio Release Date is here!


The much awaited audio release of Illayathalapathy Vijay’s fantasy adventure film ‘Puli’ is all set to happen on the 2nd of August at a gala event planned by the team.
Music for ‘Puli’ is composed by Devi Sri Prasad and Vijay and Shruti Haasan have sung for the film. The film has Vijay, Prabhu, Sudeep, Sridevi, Hansika, Shruti Haasan and Sathyan among a host of other supporting cast and is presented by P.T.Selvakumar and Shibu Thameens under the banner SKT Studios and is expected to hit the screens on the 17th of September.

Monday, June 29, 2015

இந்தியா ஏ கிரிக்கெட் அணியில் மூன்று தமிழர்கள்!


இந்தியாவில் நடைபெறும் முத்தரப்புப் போட்டியில், ஆஸ்திரேலியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ ஆகிய அணிகளுடன் இந்தியா ஏ அணி விளையாடவுள்ளது. இதற்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது.
புஜாரா, இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அபினவ் முகுந்த், விஜய் சங்கர், பாபா அபரஜித் ஆகிய மூன்று தமிழர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.
ரஞ்சி இறுதிப் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின. கர்நாடகா கோப்பையை வென்றது. இதனால் இந்தியா ஏ அணியில் இரு அணி வீரர்களும் அதிகம் இடம்பிடித்துள்ளார்கள்.
இந்தியா ஏ: புஜாரா (கேப்டன்),  கேஎல் ராகுல், அபினவ் முகுந்த், கருண் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர், நமன் ஓஜா, விஜய் ஷங்கர், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, ஷர்துல் தாக்கூர், வருண் ஆரோன், அபிமன்யூ மிதுன், உமேஷ் யாதவ், ஸ்ரேயாஸ் கோபால், பாபா அபரஜித்.

ஓய்வை உறுதி செய்தார் சங்கக்காரா


இலங்கை வீரர் சங்கக்காரா(37) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய் துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக குமார் சங்கக்காரா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: ஓய்வை அறிவிக்க இதுவே சரியான தருணம். உலகக் கோப்பை முடிந்தவுடன் ஓய்வு பெற விரும்பினேன். ஆனால், தேர்வுக் குழுவினர் கேட்டுக் கொண்டதால் தொடர்ந்தேன்.
நான்கு டெஸ்ட்களில் விளை யாட ஒப்புக் கொண்டேன். அந்த ஒப்பந்தத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும். சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும். எனவே, விலகுகிறேன். சாதனைகளுக்காக நீண்ட நாள் விளையாட விரும்ப வில்லை. தனிப்பட்ட சாதனை களுக்காக மட்டுமே விளையாட விரும்ப வில்லை. இது ஓய்வு பெறுவதற்கான தருணம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
132-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சங்கக்காரா 12,305 ரன்கள் குவித்துள்ளார். 38 சதங்களை விளாசியுள்ளார். தற்போது விளையாடி வருபவர் களிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர் இவர்தான்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் 15,921 என்ற சாதனையும், அதிக சதம் (51) என்ற சாதனையும் சச்சின் வசம் உள்ளது.

ஜிம்பாப்வே தொடரில் ரஹானே தலைமையில் 'ஆச்சரிய' அணி



ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக, ரஹானே தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்துள்ள நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சில ஆச்சரியங்கள் அடங்கியுள்ளன.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ஜூலை 10-ல் தொடங்குகிறது. மூன்று ஒருநாள் போட்டிகளும், இரண்டு ட்வென்டி 20 போட்டிகளும் இதில் அடங்கும்.
கேப்டன் தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, உமேஷ் யாதவ், ரோஹித் சர்மா மற்றும் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு இளம் வீரர் ரஹானே தலைமை தாங்குகிறார்.
அதேவேளையில், மூத்த சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மற்றும் மூத்த பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா ஆகியோர் இந்திய ஒருநாள் அணிக்குத் திரும்புகின்றனர்.
ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு இயக்குநராக ரவி சாஸ்திரி இல்லை. எனினும், சஞ்சய் பாங்கர், பரத் அருண் மற்றும் ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய பயிற்சிக் குழுவுடன் புறப்படுகிறது இந்தப் படை.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல், "உங்களைப் போலவே வங்கதேசத்தில் இந்திய அணியின் ஆட்டத்தில் எங்களுக்கும் மகிழ்ச்சி இல்லை. எழுச்சியை நோக்கி பயணிக்க வேண்டும்" என்றார்.
அணியில் எவ்வித சச்சரவும் இல்லை என்றும், தோனியின் விலகல் பற்றியெல்லாம் எதுவும் பேசப்படவில்லை என்றும் கூறிய அவர், "கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவேதான் ரஹானே கேப்டன் ஆனார்" என்றார்.
இந்திய அணி விவரம்:
ரஹானே (கேப்டன்), முரளி விஜய், ராயுடு, மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, ஹர்பஜன் சிங், அக்சர் படேல், கார்ன் சர்மா, தவால் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஷ்வர் குமார், மோஹித் சர்மா, சந்தீப் சர்மா
திராவிட் வழிகாட்டுதலில் 'இந்திய ஏ' அணி
ஆஸ்திரேலியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ அணிகளுடன் மோதும் இந்திய ஏ அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு புஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 19 முதல் தொடங்கும் இந்த முத்தரப்புத் தொடரில், இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக ராகுல் திராவிட் இருப்பார்.
இந்திய ஏ அணி விவரம்: புஜாரா (கேப்டன்), கே.எல்.ராகுல், அபினவ் முகந்த், கருன் நாயர், ஸ்ரேயஸ் ஐயர், நமான் ஓஜா, விஜய் சங்கர், அமித் மிஸ்ரா, பிரக்யன் ஓஜா, ஷர்துல் தாகூர், வருண் ஆரோன், அபிமன்யு மிதுன், உமேஷ் யாதவ், ஸ்ரேயஸ் கோபால், பாபா அபரஜித்

ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முடியாது: பிரபல நடிகை மறுப்பு

பிரியாணி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர்  நடிகை மாண்டி தாக்கர். இவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, மற்ற நடிகைகள் போலவே ரஜினியுடன்  நடிக்க எனக்கும் ஆசை உள்ளது. ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது. காரணம் ரஜினி, அமிதாப் போன்றவர்கள் என் தந்தையை போன்றவர்கள். அதனல் அவர்களுடன் காதல் காட்சிகள், டூயட் காட்சிகளில் நடிக்க இயலாது என்றார்.

விஜய் படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கும் சமந்தா

கத்திபடத்திற்கு பிறகு சமந்தா, விஜய்யுடன் இணைந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இப்படத்தில் எமிஜாக்சன், ராதிகா சரத்குமார், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் சமந்தா கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, சமந்தா இப்படத்தில் காலேஜ் பெண்ணாக நடிக்கிறாராம். இவருடைய கதாபாத்திரம் ரொம்பவும் துறுதுறுவென இருக்கும் என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்கவிருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட இப்படத்துக்கான அனைத்து பாடல்களையும் இவர் முடித்துக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்பாடல்களை அட்லி சென்னையிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளாராம்.

KAMAL DRENCHED IN BLOOD IN THOONGAVANAM


Kamal Haasan’s Thoongavanam is fast progressing at ECR opposite VGP Golden beach in Chennai. Reliable sources reveal that the art direction team has erected a massive set resembling a club in the area. It is also said that without the camera and the rest of the set-up, general public is likely to mistake the set as a party place and might even go to the extent of buying entry tickets. The place is said to look that authentic and real. The pub is named as Insomnia catering to the title.
Currently the unit is shooting few important scenes along with a song sequence. Kamal, Trisha and Kishore are participating in the shoot. Kamal was seen singing along for a trippy track of Ghibran. About fifty odd junior artists were also said to be part of the shoot. Kamal was reportedly spotted in a white shirt and a dark pant with blood all over his dress. Trisha and Kishore were seen with bruises on their face looking tired and devastated.
These things suggest that the film could be high on action with a pub as its core. Stay tuned for more updates!

Saturday, June 27, 2015

Top 5 Most expensive smart phones 2015.

5) Gresso Radical Black R2 ($3,000)

The main features are similar to those of Gresso Radical Black R3. The case and the back cover are made from titanium grade 5, the same used in the aerospace industry. You will find black titanium sensor keys.


4) Gresso Radical R2 ($3,000)

This manually assembled smartphone runs on Android 4.1.3 operating system. You will find 18k yellow gold Gresso logo (1g) on this awesome model! The phone weighs 219 grams and offers 36 GB internal storage.

3) Gresso Radical R3 ($3,000)

Gresso Radical R3 runs on Android v4.1.2 (Jelly Bean) mobile operating system. This dual SIM smartphone is powered by Quad Core 1.2 GHz processor. It comes with 8 MP camera. The model offers 4.5 inches display.

2) Gresso Regal Black R3 ($5,000)

Gresso Regal R3 Black Edition features a PVD-coated titanium case and white or yellow 18k gold trim. This phone runs on Android KitKat. It offers features like 5 inches screen, 1.5 GHz processor, 2 GB RAM, 32 GB storage, 13 MP camera and much more!


1) Vertu Aster ($6,900)

Vertu Aster blends stunning aesthetics with superb performance. Vertu has used titanium, leather and fifth generation sapphire. It runs on Android 4.4.2 KitKat. There is 64 GB of internal storage memory and much more! It is definitely a winner!

"Vaalu" Trailer 2



Will 'Avatar 2' Release Date Affected By The Death Of Music Composer James Horner From Plane Crash? James Cameron Pays Tribute



Will the production of James Cameron's "Avatar 2" movie get affected by the untimely death of James Horner, the well known music composer who worked with Cameron since the 1980s?
James Horner, has died in a California plane crash aged 61.
ADVERTISING
"A trained pilot, he is reported to have been alone aboard a small private plane which crashed north of Santa Barbara on Monday morning,"BBC reported.
And while James Cameron did not say anything about the effect of Horner's death to the development of "Avatar 2" movie, he paid his tribute to the late music composer and friend.
"There's so much music he could have done. We were looking forward to our next gig," Cameron told People.
While the pair had worked together in "Aliens," it's not until the the late 1990s when they won their both Oscars for the movie "Titanic" in 1998.
In a joint statement Cameron and his "Avatar" producing partner Jon Landau said "the Avatar community has lost one of our great creative lights."
"James' music was the air under the banshees' wings, the ancient song of the forest, and the heartbeat of Eywa," they said.
"We have lost not only a great team-mate and collaborator, but a good friend.
"James's music affected the heart because his heart was so big, it infused every cue with deep emotional resonance, whether soaring in majesty through the floating mountains, or crying for the loss of nature's innocence under bulldozer treads.
"The beauty and power of Avatar lay not just in the superb performances and the visual splendour, but in the music that made us cry and exult along with our characters. Irayo, James. Fly brother.''
Horner previously explained the reason to Cameron's decision in delaying "Avatar 2" for another year.
Apparently, the 60-year-old Canadian filmmaker is having some problems in making the trilogy since the script is originally made for "four sequels."
"Right now Jim has four sequels, script wise," music composer James Horner said in his interview. "And he's trying to make it into three. And that is where, I think, his effort is going right now. To keep it to three sequels. Because he's got so much going on how do you keep it from expanding into a fifth movie, total. And he'll get that sorted out."

ஒருநாள் முன்னதாகவே வெளியாகும் அர்னால்டு படம்.


தமிழ்ப்படங்களைக் காட்டிலும் ஆங்கிலப்படங்களை வாங்கி வெளியிடுபவர்களுக்கு நிச்சயம் இலாபம் கிடைக்கிறது என்பது அண்மைககாலமாக நடந்துகொண்டிருக்கிறது. அண்மையில் வெளியான ஜூராசிக்வேர்ல்டு திரைப்படம் நேரடித்தமிழ்ப்படங்களை விட அதிகவசூல் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தைத் தமிழகத்தில் திரையிட பல பெரியநிறுவனங்கள் போட்டிபோட்டன, யாருக்கும் தராமல் அவர்களே திரையிட்டனராம். நல்லவசூலையும் பார்த்திருக்கிறார்கள். அதனால், ஜூலை 3 ஆம் தேதியன்று கமல் நடிக்கும் பாபநாசம் படம் வெளியாவது உறுதியாகிவிட்டாலும். 

அதேநாளில் அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படமும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஹாலிவுட் படங்கள் வெளியாகும் முந்தினநாளே ஸ்பெஷல்பிரிமியர்ஷோ போடுவார்களாம். படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள் டிக்கெட் வாங்கிக்கொண்டு படம் பார்ப்பதுதான் ஸ்பெஷல்பிரிமியர்ஷோ. 

இதுவரை தமிழ்நாட்டில் இதுபோன்று நடந்ததில்லை, இப்போது இந்தப்படத்தை வெளியிடும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனத்தினர், ஜூலை இரண்டாம்தேதி அதுபோன்ற பிரிமியர்ஷோக்களை நடத்தவிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் சுமார் நூறுதிரையரங்குகளில் இந்தப்படத்தை வெளியிடவிருக்கிறார்களாம். 

இன்று நேற்று நாளை - படம் எப்படி?



இன்றைக்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து அதாவது 2065 இல், ஒரு விஞ்ஞானி காலஇயந்திரத்தைக் (டைம்மிஷின்) கண்டுபிடிக்கிறார். அந்த இயந்திரத்தைப் பரிசோதிக்க அதை 2015 ஆம் ஆண்டுக்கு அனுப்புகிறார். இங்கே அந்தஇயந்திரத்தைப் பற்றித் தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவருடைய உதவியால் அது நாயகன் விஷ்ணுவிஷால் மற்றும் அவருடைய நண்பர் கருணாகரன் ஆகியோருக்குக் கிடைக்க அப்புறமென்ன, ஒரே அட்டகாசம்தான்.

குடித்துவிட்டுப்போட்ட மதுபாட்டில்களைக் கழுவி அதைப்புதிதுபோலாக்குவதற்காக இயந்திரம் நிறுவுவது உட்பட பல புதியயோசனைகளை வைத்துக்கொண்டு அவற்றைச் செயல்படுத்த வங்கிக்டன் கேட்டு அலைந்துகொண்டிருக்கிறார் நாயகன் விஷ்ணு. வேலையில்லாவிட்டால் என்ன? அழகான, பணக்காரவீட்டுப்பெண்ணான மியாஜார்ஜைக் காதலித்துக்கொண்டிருக்கிறார்.
சோதிடராக இருக்கும் கருணாகரனைத் தேடி ஆளே வராமல் ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் காலஇயற்திரம் கிடைத்ததும் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. கூடவே ஒரு சிக்கலும். அதை எப்படிச் சமாளிக்கிறார்கள் என்பதுதான் படம். 

காலஇயற்திரத்தை வைத்து ஒருபவுன் தங்கம் ஐம்பதுரூபாய்க்கு விற்கும் காலத்துக்குப் போய் நூறுபவுன் தங்கம் வாங்கி வந்து இப்போது விற்றுவிடலாம் என்று போடும் திட்டம் படுசொதப்பலாகிவிட, அதன்பின்னர், நேரமும் இடமும் மட்டும் சொன்னால்போதும் தொலைந்துபோன பொருட்களைக் கண்டுபிடித்துத் தருகிறோம் என்று விளம்பரம் செய்கிறார்கள். ஒருவர் வந்து என்னுடைய இந்தப்பொருளைக் காணவில்லை என்று சொன்னால் உடனே காலஇயந்திரத்தில் ஏறி அந்தநேரத்துக்குப் போய் அந்தப்பொருள் எப்படித் தொலைந்தது என்று கண்டுபிடித்து, தற்போது அது எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லி பணத்தைக் குவிக்கிறார்கள். அந்தக்காட்சிகள் எல்லாம் ரசித்துச்சிரிக்கிற மாதிரி இருக்கின்றன. தொடக்கத்திலேயே வருகிற தொலைக்காட்சித் தொகுப்பாளினி அவர்களிடம் மாட்டுகிற விதம் வெடிச்சிரிப்பு.
இப்படிச் சுவையாகப் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் இரண்டுமாதங்களுக்கு போய் ஒரு பொருளைத் தேடுகிற நேரத்தில் ஒரு மாற்றத்தைச் செய்துவிடுகிறார்கள். அதனால் இறந்துபோன ஒரு கொடுமையான ரவுடி பிழைத்துவிடுகிறான். அவனால் நாயகி மியாஜார்ஜின் குடும்பத்துக்கே ஆபத்து வந்துவிடுகிறது. அந்த நேரத்தில் காலஇயற்திரமும் பழுதாகிவிடுகிறது. அதனால் இரண்டாம்பாதி பரபரப்பாகிவிடுகிறது. 

நுணுகிப்பார்த்தால் பல சந்தேகங்கள், கேள்விகள் வரலாம் என்கிற திரைக்கதையை வைத்துக்கொண்டு அந்தக்குறைகள் வெளிப்படையாகத் தெரியாதபடி பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஆர்.ரவிக்குமார். நாயகன் விஷ்ணுவும் கருணாகரனும் படம் முழுவதும் வந்தாலும் போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். 

அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டே சமாளித்துவிடலாம் என்று நினைக்கிற விஷ்ணுவுக்குப் பொருத்தமாக இந்தப்படத்தின் பாத்திரம் அமைந்திருக்கிறது. அதனால் எளிதாக நடித்துவிடுகிறார். எல்லா நேரமும் விஷ்ணு கூடவே இருக்கும் கருணாகரன் பெரியபலம். அவரை வைத்துச் சோதிடத்தைக் கிண்டல் செய்திருக்கிறார்கள். நாயகி மியா, அழகாக இருக்கிறார், அழகாகச் சிரிக்கிறார், ஒரு கட்டத்தில் அவர் இறந்துபோய்விடுகிறார் என்பதைப் பார்வையாளர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்பது அவருக்குக் கிடைத்த வெற்றி.
ரவுடியாக நடித்திருக்கும் ரவிசங்கர், சமகாலவிஞ்ஞானியாக இருக்கும் பார்த்தசாரதி, நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் பொறுப்புகளைச் சரியாகச் செய்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள். 2065  இன் விஞ்ஞானியாக வருகிற ஆர்யா, படத்தின் அடுத்த பாகத்தின் கதாநாயகன் ஆகும் வாய்ப்பிருக்கிறது.

ஹிப்ஹாப்தமிழாவின் இசையில் படத்தில் பாடல்கள் இருக்கிறதா என்கிற கேட்கிற அளவுக்குப் பாடல்கள் வந்துபோகின்றன. பின்னணிஇசை பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் வசந்தும், படத்தொகுப்பாளர் லியோஜான்பாலும் தங்கள் வேலைகைளப் பொறுப்போடு செய்திருக்கிறார்கள். 

கொஞ்சம் பிசகினாலும் முற்றிலும் புரி£யமல் போய்விடுகிற கத்திமேல் நடக்கிறமாதிரியான திரைக்கதையைக் கையிலெடுத்துக்கொண்டு கூடுமானவரை வுவையான படத்தைக் கொடுத்த முதல்படஇயக்குநர் ஆர்.ரவிக்குமார் பாராட்டுக்குரியவர்.

அஜீத் ஓகே சொன்னால்தான் தமிழ் படம் இயக்குவேன்: டைரக்டர் பிடிவாதம் .


விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கியவர் சித்திக். மலையாளத்தில் மம்மூட்டி நடிக்க சித்திக் இயக்கத்தில்பாஸ்கர் தி ராஸ்கல்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது. இதை தமிழ், தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய எண்ணி உள்ளார். இதில் நடிக்க பல ஹீரோக்கள் தயாராக உள்ளனர். ஆனால் தமிழில் ரஜினி அல்லது அஜீத் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் எண்ணுகிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிப்பதால் அஜீத்தை அணுக உள்ளாராம் சித்திக். அவர் நோ சொன்னால் இந்தி அல்லது தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்யச் சென்றுவிடுவாராம் இயக்குனர்.

இந்தியில் அக்ஷய்குமார், தெலுங்கில் வெங்கடேஷ் இருவரும் நடிக்க பச்சை கொடி காட்டி உள்ளனர். ஆனாலும் முதலில் தமிழில் இப்படத்தை இயக்கவே சித்திக் ஆர்வமாக இருக்கிறார். அஜீத்தை பொறுத்தவரை ஸ்கிரிப்ட்டில் அதிக கவனம் செலுத்துவதால் தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 56வது படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் கிரீடம். இதன் தமிழ் ரீமேக்கில் அஜீத் நடித்திருந்தார். அதுபோல் பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அஜீத் நடிக்க சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது

ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா ஹீரோ


நான் படத்தையடுத்துபாகுபலிபிரமாண்ட படத்தை இயக்கி உள்ளார் ராஜமவுலி. முதல்பாகம் முடிந்த கையோடு 2ம் பாகத்துக்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார். இயக்குனர் கேட்டுக்கொண்டதையடுத்து பட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகொண்டார். ஒரு சந்திப்பில் சிறிய கதாபாத்திரத்திலாவது பாகுபலியில் நடிக்க வேண்டும் என ராஜமவுலியிடம் கேட்டார். இது இயக்குனரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து ராஜமவுலி கூறும்போது, ‘சூர்யாவை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று நான் எப்போதும் சொன்னது கிடையாது. என்னிடம் அவர் நடிக்க சான்ஸ் கேட்டபோது தர்மசங்கடத்தில் ஆழ்ந்துவிட்டேன்என்றார்.

சிங்கம் 3’ம் பாகத்தில் நடிக்க தயாராகிவிட்டார் சூர்யா. அதேபோல் பாகுபலி 2ம் பாகத்தை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. தற்போதுள்ள படங்கள் முடிந்ததும் ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா நடிப்பார். இதற்கான கதையை யோசிக்க தொடங்கி விட்டாராம் ராஜமவுலி. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இவர்கள் இருவரும் இணையும் படம் தொடங்கும் என்றும் அல்லது பாகுபலி 2ம் பாகத்திலும் சூர்யா நடிக்கக்கூடும் என நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.