கோலிவுட் திரையுலகை பெரிய நடிகர்களையும், அறிமுக நடிகர்களையும் கடந்த சில வருடங்களாக பேய் பிடித்து ஆட்டி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அறிமுக நாயகர்கள் முதல் ஆர்யா, சூர்யா வரை பேய்ப்படங்களில் நடித்து வரும் நிலையில்
தற்போது மெட்ராஸ்' புகழ் கலையரசன் நடிக்கும் ஒரு பேய்ப்படம் ஒன்று தற்போது உருவாகி வருகிறது.
ஐ.டியில் பணிபுரிந்த சதீஷ் சந்திரசேகரன் என்பவர் இயக்குனராகியுள்ள திரைப்படம் 'ஜின்'. இந்த படம் இவர் தன்னுடைய கல்லூரி நாட்களில் சந்தித்த உண்மையான அனுபவத்தையே படமாக எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஐந்து கல்லூரி மாணவர்கள் ஒரு ஹில் ஸ்டேஷனுக்கு பிக்னிக் செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கே தெரியாது அந்த ஐந்து பேர்களில் ஒருவர் பேய் என்று. ஹில் ஸ்டேஷனில் அவர்களுக்கு ஏற்படும் அசாதாரண சம்பவங்கள்தான் கதை. தற்போது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் காமெடி கலந்த பேய்ப்படமாக இந்த படம் இருக்காது என்றும் தமிழ் ஆடியன்ஸ்களுக்கு இந்த படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்று கூறிய இயக்குனர், தான் கல்லூரியில் படிக்கும்போது இதே போன்று பேயுடன் பிக்னிக் சென்ற அனுபவத்தை சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.
கலையரசன், ஹரி, காளி வெங்கட், அர்ஜூனன் முண்டாசுப்பட்டி முனீஷ்காந்த் ஆகியோர்களுடன் ப்ரீத்தி என்ற புதுமுக நடிகையும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ராதன் என்பவர் இசையமைக்கின்றார். இவர் சந்தானம் நடித்த 'வாலிபராஜா' என்ற படத்திற்கு ஏற்கனவே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment