Tuesday, June 23, 2015

பாகுபலியால் பாபநாசத்துக்குச் சிக்கலா?


கமல், கௌதமி நடித்த பாபநாசம் படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் தணிக்கைச்சான்றிதழ் பெறவில்லையென்பதால் வெளியீட்டுத் தேதியை வெளிப்படையாகச் சொல்லவில்லையாம்.

ஓரிரு நாளில் தணிக்கைச்சான்றிதழ் கிடைத்துவிடும் அதன்பின் வெளியீட்டுத்தேதி அறிவிக்கப்படும். ஜூலை 3 என்கிற தேதி மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அநேகமாக ஜூலை 24 அன்று படம் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. பாபாநாசம் படக்குருவினர் இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லையென்றாலும், ஜூலை பத்தாம்தேதி பாகுபலி படம் எல்லா மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் பாபநாசம் ரிலீஸ்தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். 

ஜூலை 3 இல் இந்தப்படம் வெளியானால் அடுத்தவாரமே வெளியாகும் பாகுபலி படத்துக்குத் திரையரங்குகள் கிடைப்பது சிரமமாகும் அல்லது பாபாநாசம் படத்தை எடுத்துவிட்டு பாகுபலியைத் திரையிடுவதும் நிகழலாம் என்பதால் அந்தப்படம் வெளியான பிறகு நிதானமாக இந்தப்படத்தை வெளியிட்டுக்கொள்ளலாம் என்று பாபநாசம் தயாரிப்பாளர்கள் நினைப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இதுதான் உண்மையென்றால் இது நல்லநடைமுறை என்றும் இதுபோல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப்போனால் எல்லோருக்கும் நல்லதென்றும் திரையுலகில் சொல்கிறார்கன்.

No comments:

Post a Comment