தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்து, மணிகண்டன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘காக்கா முட்டை’. தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்ற இப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே பல கோடி ரூபாய் வசூல் செய்தது. அத்துடன் விமர்சன ரீதியாகவும் இப்படம் நன்றாக பேசப்பட்டது. இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இதர மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வெளியான இப்படத்திற்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கு கர்நாடக அரசு வரி விலக்கு அளிப்பது என்பது அபூர்வமான விஷயம். அந்த கௌரவம் ‘காக்கா முட்டை’ படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் ‘காக்கா முட்டை’ படக் குழுவினர் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment