Thursday, June 25, 2015

நடிகை காஜல் அகர்வால் பேட்டி: எனக்கு காதலிக்க நேரமில்லை





‘பொம்மலாட்டம்’ படத்தில், டைரக்டர் பாரதிராஜாவினால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர், காஜல் அகர்வால். ‘பழனி,’ ‘துப்பாக்கி,’ ‘ஜில்லா,’ ‘நான் மகான் அல்ல’ ஆகிய படங்களிலும் இவர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இப்போது, பாலாஜி மோகன் டைரக்ஷனில் தனுஷ் ஜோடியாக, ‘மாரி’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தை சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்காக சென்னை வந்த காஜல் அகர்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு காஜல் அகர்வால் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்களைப் போன்ற இளம் வயது கதாநாயகியான ஐஸ்வர்யா, ‘காக்கா முட்டை’ படத்தில் 2 குழந்தைகளுக்கு தாயாக நடித்து இருக்கிறாரே...அதுபோன்ற ஒரு கதாபாத்திரம் அமைந்தால், நீங்களும் 2 குழந்தைகளுக்கு தாயாக நடிப்பீர்களா?

பதில்:- அப்படி ஒரு கனமான கதாபாத்திரம் எனக்கு கிடைத்தால், நிச்சயமாக நானும் 2 குழந்தைகளுக்கு தாயாக நடிக்க தயாராக இருக்கிறேன்.

கேள்வி:- ‘மாரி’ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள்?

பதில்:- ‘பேஷன் டிசைனராக’ நடிக்கிறேன்.

கேள்வி:- ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறீர்களாமே, உண்மையா? அருகில் அமர்ந்திருந்த ராதிகா சரத்குமார் சிரித்தபடி, ‘‘நான் அவ்வளவு சம்பளம் கொடுக்கவில்லை’’ என்றார். 

No comments:

Post a Comment