இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 10ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
'பாகுபலி' படத்தில் 'கட்டப்பா' என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சத்யராஜ். இப்படத்தில் சத்யராஜ் வேடத்திற்கு முன்பு, நாசரை சந்தித்து பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜமெளலி.
அப்போது "கட்டப்பா என்ற பாத்திரத்திற்கு சத்யராஜ் சாரிடம் பேசலாம் என்று இருக்கிறேன்" என்று கேட்டபோது "நன்றாக இருக்கும். ஆனால், அந்த ஒரே ஒரு காட்சியில் மட்டும் அவர் நடிப்பாரா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. போய் கூறுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
முதலில் சத்யராஜிடம் கதையை கூறும் முன் "சார்... இப்படத்தில் ஒரு காட்சியில்.. " என்று அந்த காட்சியை விவரித்திருக்கிறார் ராஜமெளலி. அதற்கு பிறகு தான் முழுக்கதையையும் கூறியிருக்கிறார். அதற்கு பிறகு சத்யராஜ் "முதலில் சொன்ன காட்சி இப்படத்தில் இருந்தால் மட்டுமே இக்கதையைப் பண்ணுவேன்" என்று தெரிவித்து நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
முன்பாக ராஜமெளலி கதைச் சொல்ல வரவிருக்கிறார் என்றவுடன் சத்யராஜ் நேரடியாக பிரபாஸுக்கு போன் செய்து "ராஜமெளலி கதை சொல்ல வருகிறார்" என்றவுடன் "அப்படியா சார்.. சூப்பர்.. கதையைக் கேளுங்கள். எனக்கு வேறு எதுவும் தெரியாது" என்று கூறி விட்டார். கதையைக் முழுமையாக கேட்டவிட்டு பிரபாஸுக்கு போன் செய்து, "அந்த ஒரு காட்சி தான் மெயின். நான் பண்ணவிருக்கிறேன்" என்று சத்யராஜ் தெரிவித்தவுடன் பிரபாஸ் "சார்.. நீங்க தெய்வம்" என்று தெரிவித்திருக்கிறார்.
அப்படி என்ன தான் சத்யராஜ் அந்த காட்சியில் செய்திருக்கிறார் என்பது சஸ்பென்ஸ் என்கிறது படக்குழு. அக்காட்சி, பெரிய நடிகர்கள் நடிக்கத் தயங்கவல்ல நெருடலானது என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment