விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் புதிய
படம் ‘புலி’. சிம்புதேவன் இயக்கியுள்ள
இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, ஸ்ரீதேவி
கபூர், நான் ஈ சுதீப்
உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீசரும் வெளியிடப்பட்டது.
நேற்று முந்தைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நேற்று டீசர் வெளியானது. யுடியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்ட டீசரை ஒரே நாளில் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.
இப்படத்தில் விஜய், அரசர் காலத்து உடை அணிந்து நடித்துள்ளார். இதுவரை பாடல் காட்சிகளுக்கு மட்டுமே இதுபோல் உடை அணிந்து நடனமாடியுள்ளார். தற்போது ஒரு படம் முழுக்க இதுபோல் உடை அணிந்து நடிப்பது இதுதான் முதல்முறை. விரைவில் படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment