Thursday, June 25, 2015

சூப்பர் ஸ்டாரைத் பின் தொடரும் 2 மில்லியன் ரசிகர்கள்

டாப் ஹீரோ ரஜினிக்கு ரசிகர்கள் எவ்வளவு பேர் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஸ்டைல்,மாஸ் என இந்தியாவின் ஷாருக் கான் போன்ற பெரிய நடிகர்கள் கூட ரஜினிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். 
இந்நிலையில் தற்போது ரஜினி காந்தின் ட்விட்டர் பக்கத்தை 2 மில்லியன் அதாவது 20 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.  2013ம் ஆண்டு பிப்ரவரியில் ரஜினி காந்த தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கைத் துவக்கினார். ஆரம்பித்து சில நாட்களிலேயே அதிக அளவில் ரசிகர்கள் பின் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. 
மிக அரிதாக ட்விட்டரைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர் ரஜினி காந்த் இரண்டு வருடத்தில் 12 ட்வீட்களை மட்டுமே இதுவரை ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ட்விட்டரில் அதிக ரசிகர்கள் கொண்ட தமிழ் சினிமா நடிகராக ரஜினிகாந்த மாறியுள்ளார். 
இவரைத் தொடர்ந்து தனுஷ் 1.75 மில்லியன் ரசிர்களுடன் இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நாயகிகளில் ஸ்ருதி ஹாசன் 2.75 மில்லியன் ரசிகர்களுடன் முதல் இடத்திலும், த்ரிஷா 1.8மில்லியனுடன் இரண்டாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment