Friday, June 26, 2015

கமலுக்கு சவால்விட்ட விவேக்


கமல் நடிப்பில் உருவாகியுள்ள பாபநாசம் படம் வருகிற ஜுலை 3-ந் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிரடியாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், அன்றைய தேதியில் ஏற்கெனவே வெளியாவதாக அறிவித்திருந்த படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதன்படி, அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ளநாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்படம் ஜுலை 31-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இதையடுத்து, விவேக் நடிப்பில் உருவாகியுள்ளபாலக்காட்டு மாதவன்திரைப்படமும் ஜூலை 3-ந் தேதி வெளியாகப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அருள்நிதி படத்தைப்போல், இந்த படமும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவேக், கமலுக்கு சவால் விடுவதுபோல் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, முன் அறிவிப்பின்றி வரும்பாபநாசம்தியேட்டர்களை ஆக்கிரமிக்கலாம். இருப்பினும் ஊடக, ரசிகர்கள் ஆதரவுடன்பாலக்காட்டு மாதவன்பெரும் வெற்றியடையும் என்று தெரிவித்துள்ளார். கமலின்பாபநாசம்படம் வெளிவருவதால், தன்னுடைய படத்தை தள்ளிவைக்கப் போவதில்லை என்பதையே இந்த டுவிட்டர் செய்தி கூறுகிறது. அதனால், கமலுடன் மோத விவேக் இப்போதே தயாராகிவிட்டார். இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment