கமல்ஹாசன், கெளதமி, நடிப்பில் வெளியாகவிருக்கும் பாபநாசம் படம் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகவிருப்பதால், அதே நாளில் வெளியாகவிருந்த அருள் நிதியின் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது.
ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் ஜூலை 3ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று சென்சார் பார்வைக்குச் சென்ற பாபநாசம் க்ளீன் யூ சான்றிதழுடன் ஜுலை 3ம் தேதி வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்தனர்.
அருள்நிதி படத்தின் தயாரிப்பாளரான ஜெ.எஸ்.கே. ஃபிலிம்ஸ் கார்பரேஷன் தலைவர் ஜெ.சதீஷ்குமார் கூறும்போது, “ ஜுலை 3ம் தேதி வெளியாகவிருந்த நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும் திரைப்படம் தற்பொழுது கமல் நடித்த பாபநாசம் படமும் ஒரே தேதியில் வெளியாவதால் எங்களது விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜூலை 31ம் தேதி அன்று நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment