Saturday, June 27, 2015

1000 படங்களை கடந்த இசைஞானி - மும்பையில் பாராட்டு விழா!


பாலா இயக்கத்தில்தாரை தப்பட்டைபடத்தின் மூலம் 1000வது படத்தினை இசையமைத்து நிறைவு செய்துள்ள இளைய ராஜாவுக்கு வருகிற 20-ம் தேதி பாராட்டு விழா நடக்கவிருக்கிறது. அமிதாப்பச்சன், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், ஜானகி, பி.சுசிலா உள்ளிட்ட பல கலைஞர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.
தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ராசய்யா என்ற பெயரில் பிறந்து 1976ம் ஆண்டுஅன்னக்கிளிபடத்தின் மூலம் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானார். இதுவரை 5000க்கும் மேற்பட்ட பாடலுக்கு இசையமைத்துள்ளார். தன்னுடைய 1000வது படத்தினை முடித்திருப்பதால் மும்பை திரையுலம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பால்கி பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
பால்கி இயக்கத்தில், தனுஷ், அமிதாப் பச்சன் நடித்து வெளிவரவிருக்கும்ஷமிதாப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 20ம் தேதி மும்பையில் நடைபெறவிருக்கிறது. “இந்த விழாவில் 1000 படத்திற்கு மேல் இசையமைத்து வாழ்நாள் சாதனை படைத்த இசைமேதை இளையராஜாவிற்கு பாராட்டுவிழா நடத்தவுள்ளோம். இவ்விழாவிற்கு இளையராஜாவுடன் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இளையராஜாவும் விழாவில் பாடவிருக்கிறார்என்று கூறியுள்ளார் பால்கி.
தேசிய கீதத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அமிதாப்பச்சன் குரலில், பால்கியின் இயக்கத்தில் இந்த ஆல்பம் உருவாகவிருக்கிறது. ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியிட இருப்பதாகவும் பால்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment