Saturday, June 27, 2015

அஜீத் ஓகே சொன்னால்தான் தமிழ் படம் இயக்குவேன்: டைரக்டர் பிடிவாதம் .


விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கியவர் சித்திக். மலையாளத்தில் மம்மூட்டி நடிக்க சித்திக் இயக்கத்தில்பாஸ்கர் தி ராஸ்கல்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது. இதை தமிழ், தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய எண்ணி உள்ளார். இதில் நடிக்க பல ஹீரோக்கள் தயாராக உள்ளனர். ஆனால் தமிழில் ரஜினி அல்லது அஜீத் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் எண்ணுகிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி புதிய படத்தில் நடிப்பதால் அஜீத்தை அணுக உள்ளாராம் சித்திக். அவர் நோ சொன்னால் இந்தி அல்லது தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்யச் சென்றுவிடுவாராம் இயக்குனர்.

இந்தியில் அக்ஷய்குமார், தெலுங்கில் வெங்கடேஷ் இருவரும் நடிக்க பச்சை கொடி காட்டி உள்ளனர். ஆனாலும் முதலில் தமிழில் இப்படத்தை இயக்கவே சித்திக் ஆர்வமாக இருக்கிறார். அஜீத்தை பொறுத்தவரை ஸ்கிரிப்ட்டில் அதிக கவனம் செலுத்துவதால் தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 56வது படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் கிரீடம். இதன் தமிழ் ரீமேக்கில் அஜீத் நடித்திருந்தார். அதுபோல் பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அஜீத் நடிக்க சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது

No comments:

Post a Comment