Saturday, June 27, 2015

ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா ஹீரோ


நான் படத்தையடுத்துபாகுபலிபிரமாண்ட படத்தை இயக்கி உள்ளார் ராஜமவுலி. முதல்பாகம் முடிந்த கையோடு 2ம் பாகத்துக்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்கிவிட்டார். இயக்குனர் கேட்டுக்கொண்டதையடுத்து பட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகொண்டார். ஒரு சந்திப்பில் சிறிய கதாபாத்திரத்திலாவது பாகுபலியில் நடிக்க வேண்டும் என ராஜமவுலியிடம் கேட்டார். இது இயக்குனரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து ராஜமவுலி கூறும்போது, ‘சூர்யாவை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று நான் எப்போதும் சொன்னது கிடையாது. என்னிடம் அவர் நடிக்க சான்ஸ் கேட்டபோது தர்மசங்கடத்தில் ஆழ்ந்துவிட்டேன்என்றார்.

சிங்கம் 3’ம் பாகத்தில் நடிக்க தயாராகிவிட்டார் சூர்யா. அதேபோல் பாகுபலி 2ம் பாகத்தை முடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி. தற்போதுள்ள படங்கள் முடிந்ததும் ராஜமவுலி இயக்கத்தில் சூர்யா நடிப்பார். இதற்கான கதையை யோசிக்க தொடங்கி விட்டாராம் ராஜமவுலி. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இவர்கள் இருவரும் இணையும் படம் தொடங்கும் என்றும் அல்லது பாகுபலி 2ம் பாகத்திலும் சூர்யா நடிக்கக்கூடும் என நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment