நார்வே செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் நார்வேயின் ஹேமரைத் தோற்கடித்தார். இதனால் ஆனந்த் 5.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
போட்டியை வெல்லும் நிலையில் உள்ள டொபலோவ் நேற்று துரதிர்ஷ்டவசமாக அனிஷ் கிரியுடனான ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். இப்போது 6 புள்ளிகளுடன் அவர் முன்னிலையில் இருந்தாலும் முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்குமான இடைவெளி அரைப்புள்ளியாக குறைந்துவிட்டது. கார்ல்சன் - அரோனியன் இடையேயான ஆட்டத்தில் கார்ல்சன் வெற்றி பெற்றார். அவர் 3.5 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளார்.
போட்டியின் கடைசிச் சுற்றில் ஆனந்த்தும் டொபலோவும் மோதுகிறார்கள். இந்தச் சுற்றில் ஆனந்த் வெற்றி பெற்றால் அவர் நார்வே செஸ் போட்டியின் சாம்பியன் ஆகிவிடுவார். டொபலோவுக்கு இவ்வளவு நெருக்கடி இல்லை. டிரா செய்தால் போதும். போட்டியை வென்றுவிடுவார். வெள்ளை நிறக் காய்களுடன் அவர் ஆட உள்ளதால் சாதகமான நிலைமை உள்ளது.
பரபரப்பான நிலையில் உள்ள இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று இன்று நடக்கிறது.
No comments:
Post a Comment