Thursday, June 25, 2015

தனுஷ் 'அடல்ஸ் ஒன்லி' படத்தில் நடிப்பது உண்மையா?


பிரபல அமெரிக்க தொலைக்காட்சி நடிகை கிம் கர்தர்ஷியான் நடிக்கவுள்ள படமான 'ஃபார் அடல்ஸ் ஒன்லி' திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இந்த செய்தியை தற்போது படத்தின் இயக்குனர் ஃபைசல் சயீப் மறுத்துள்ளார்.

தனுஷ் ஒரு திறமையான அகில இந்திய நடிகர் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. நான் இயக்கி வரும் 'ஃபார் அடல்ஸ் ஒன்லி' படத்தில் நடிக்க அவரை நாங்கள் அணுகவில்லை. ஆனால் இந்த படத்தில் ஒரு பிரபல தமிழ் நடிகர் நடிக்கவுள்ளார் என்பது மட்டும் உண்மை.

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் துபாயை சேர்ந்த ஆண்ட்ரியா டிசெளஸா என்ற நடிகை மிகவும் போல்டாகவும், செக்ஸியாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் படக்குழு தயாராகி வருகிறது.

பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தர்ஷியான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாக்கப்படும்

இவ்வாறு இயக்குனர் ஃபைசல் சயீப் கூறியுள்ளார். இவர்தான் சமீபத்தில் 'மைன் ஹூன் ரஜினிகாந்த்' என்ற சர்ச்சைக்குரிய படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment