Monday, June 22, 2015

கடும் போட்டியில் லிங்குசாமி, பேரரசு, சுந்தர்.சி


ஜூலை ஆறாம்தேதி நடக்கவிருக்கும் தமிழ்நாடுதிரைப்படஇயக்குநர்கள்சங்கத்தின் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு போட்டி இல்லையாம்நான்கு  இணைச்செயலாளர் பொறுப்பில் இரண்டை உதவிஇயக்குநர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்கிற உதவிஇயக்குநர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால் அந்தப் பொறுப்புக்கும் பனிரெண்டு செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பில் ஏழு செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கும் உதவிஇயக்குநர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியிருக்கும் புதியஅலைகள் சார்பாகப் போட்டியிடவிருக்கிறார்களாம். 

தலைவராக விக்ரமன் செயலாளராக செல்வமணி ஆகியோர் இப்போதே தேர்வான மாதிரிதான் என்பதால் மற்ற பதவிகளுக்கான போட்டியைத் தவிர்க்கப் பேச்சுவார்தைகள் நடத்திக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அது வெற்றிகரமாக அமையவில்லையென்றால் போட்டி நிச்சயம். தேர்தலும் நடக்கும். இப்போது விக்ரமன் தலைமையிலான அணியில் இணைச்செயலாளர் பொறுப்புக்கு லிங்குசாமி, பேரரசு, சுந்தர்சி மற்றும் ஏகாம்பவாணன் என்கிற இணைஇயக்குநர் ஆகிய நான்குபேர் போட்டியிடவிருக்கிறார்களாம்.

இதில் நான்கில் இரண்டு பொறுப்புகளுக்குப் போட்டி என்பதால் அந்தப்பொறுப்புக்குப் போட்டியிடும் மூன்றுபெரியஇயக்குநர்களும் போட்டியைச் சந்தித்து வென்றாக வேண்டிய நிலை என்று சொல்கிறார்கள். வேட்புமனுவைத் திரும்பப்பெற இன்னும் இரண்டுநாட்கள் மட்டுமே இருப்பதால் இதற்குமேல் திரும்பப்பெறுவது இருக்காது என்று சொல்லப்படுகிறது. 

அப்படிப் போட்டி உறுதியானால் லிங்குசாமி, பேரரசு, சுந்தர்சி ஆகியோர் தங்களுடைய வெற்றிக்காகக் கடுமையாக உழைத்தாகவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவர்களை எதிர்த்து தற்போது புலி படத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஜெகதீஷ் மற்றும் ஐந்துகோவிலான் ஆகிய இருவர் புதியஅலைகள் சார்பாகப் போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது


No comments:

Post a Comment