சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா நடிக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது. தமிழில் சிம்புவும், தெலுங்கில் நாக சைதன்யாவும் நடித்து வருகிறார்கள். ஆனால், இரண்டு மொழிகளிலும் மஞ்சிமாதான் கதாநாயகி.
இப்படத்தில் வில்லனாக பிரபல பாடகர் பாபா சேகல் நடிக்கிறார். இவர் முதலில் பாப் பாடகராக அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தமிழில் ‘சிங்கம்’ படத்தில் காதல் வந்தாலே..., ஒஸ்தி படத்தில் ‘ஒஸ்தி மாமே...’, ‘அலெக்ஸ் பாண்டியன் படத்தில் ‘பேட் பாய்...’ உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
இவர் ஏற்கனவே இரண்டு படத்திலும், அனுஷ்கா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ருத்ரமாதேவி’ படத்திலும் நடித்திருக்கிறார்.

No comments:
Post a Comment