Saturday, June 20, 2015

மூன்று கதைகளில் தனுஷ் தேர்வு செய்த 'மாரி'


இயக்குநர் பாலாஜி மோகன் கொடுத்த மூன்று கதைகளில், தனுஷ் 'மாரி' கதையைத் தேர்வு செய்து நடித்திருக்கிறார்.
'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் 'மாரி'. தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர், காளி வெங்கட், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
தனுஷின் வுண்டர் பார் நிறுவனமும், மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து 'மாரி' திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
தனுஷ் இயக்குநர் பாலாஜி மோகனிடம் படம் பண்ணலாம் என்று கேட்டவுடன், பாலாஜி மோகன் தன்னிடம் இருந்த மூன்று கதைகளைக் கொடுத்திருக்கிறார். அனைத்தையும் படித்துவிட்டு தனுஷ் 'மாரி' கதையைத் தேர்வு செய்து இதைப் பண்ணலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
அப்போது பாலாஜி மோகன் "சார். மூன்று கதைகளில் 'மாரி' கதையை மட்டும் உங்களை மனதில் வைத்து தான் எழுதினேன். எப்படி இதை தேர்வு செய்தீர்கள்?" என்று கேட்டு இருக்கிறார். இதற்கு தனுஷ் சிரித்துக் கொண்டே போய்விட்டார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஜூலை 17ன் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது.

No comments:

Post a Comment