Thursday, June 25, 2015

விஜய்யின் ‘புலி’ திரைப்படம்- ஒவ்வொரு நாளும் புதிய புதிய சாதனைகள்



ஒவ்வொரு நாளும் புதிய புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது விஜய்யின்புலிதிரைப்படம். சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்யின் கேரியரிலேயே பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்தின் டீஸர் கடந்த 21ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் யு டியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான முதல் 21 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களையும், 33 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்களையும், 45 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வைகளையும் கடந்து சாதனை புரிந்தபுலிடீஸர் தற்போது மேலும் ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது.

அதாவது இந்த டீஸர் வெளியாகி இன்னும் நான்கு நாட்கள் முடியாத நிலையிலேயே 30 லட்சம் பார்வைகளைச் சென்றடைந்துள்ளது. கிட்டத்தட்ட 82 மணி நேரத்தில் 44 ஆயிரம் லைக்குகளையும் பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறதுபுலிடீஸர். விஜய்யின் படங்களைப் பொறுத்தவரையில்கத்திபடத்தின் மோஷன் போஸ்டர், ‘தலைவாபடத்தின் டிரைலரைத் தொடர்ந்து 30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறதுபுலிடீஸர்.

ஒட்டுமொத்தமாக தமிழ்ப் படங்களில் , லிங்கா, கோச்சடையான், என்னை அறிந்தால், ஓகே கண்மணி, இது நம்ம ஆளு, மாஸ், அஞ்சான், கத்தி, தலைவா, பில்லா 2 ஆகிய படங்கள் ஏற்கெனவே இந்தப் பட்டியலில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment