இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாட வங்கதேச அணி தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டி இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு மற்றும் செப்டம்பர் மாத நிலவரப்படி ஒருநாள் தரவரிசையில் முதல் 7 அணிகளும் இப்போட்டியில் விளையாட முடியும்.
இப்போதைய வெற்றியின் மூலம் வங்காளதேச அணி ஒருநாள் தரவரிசையில் 93 தரவரிசை புள்ளிகளுடன் 7-வது இடம் பிடித்து சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு தகுதி பெறுவதற்கான போதுமான தரவரிசை புள்ளிகளை எட்டி விட்டது.
இதனால் மேற்கிந்தியத்தீவுகள் அல்லது பாகிஸ்தான் இதில் ஓர் அணி சாம்பியன் கோப்பையில் விளையாடும் தகுதியை இழக்க நேரிடும்.
No comments:
Post a Comment