ஆண்களும் தற்போது அழகில் அதிக கவனம் செலுத்துகின்றனர். முக்கியமாக திருமணம் ஆகப்போகும் இளைஞர்களுக்கான சில அழகு டிப்ஸ்...
முகம்: டீன் ஏஜில் ஏற்படும் மிகப் பெரிய பிரச்னை முகப்பரு. இதற்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவி வரவும். பாசிபயிறுமாவு, கடலைமாவு, சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த பேஸ்டை பயன்படுத்தவும்
முகம் வறட்சியினை போக்க: கொத்தமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒரு முறை பூசிவரலாம். ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வறட்சி மாறும். வெயிலில் செல்லும் போது, சன்ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம்.
பற்கள்: முகத்திற்கு புன்னகை சேர்க்கும் விதமாக விளங்குவது பற்கள். அப்பற்களை சுத்தமாக பாதுகாத்து கொள்ள வேண்டும். ஆனால் புகை பிடிப்பது, காபி டீ பருகுவது என பற்களின் நிறத்தை கெடுத்து கொள்கிறார்கள் பற்களின் நிறத்தை பளிர் நிற வெண்மைக்கு கொண்டு வர பல சிகிச்சை முறைகள் வந்து விட்டன. தினமும் இருமுறை பல் துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.
தலைமுடி: முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.
ஆடை மற்றும் அணிகலன்கள்:
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள். ஆண்கள் ஆடைகளைத் தேர்வு செய்யும் போது, நீங்கள் போக விருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும். நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது நெருங்கிய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரஸ் நன்றாக இருக்கும் சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்து கொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால், கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும். இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டு வேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன்.
உதடு: சில ஆண்கள் சிகரெட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க பீட்ரூட் சாறு, அல்லது புதினா இலை சாறு, அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிகப்பாக மாறிவிடும்.

No comments:
Post a Comment