Wednesday, June 24, 2015

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டியில் விஜய்,


அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டியில் விஜய், அஜீத் தொடர்ந்து பலப்பரீட்சை செய்து வருகின்றனர். இதற்கிடையில் இருவரது ரசிகர்களும் இணைய மோதலில் ஈடுபட்டுள்ளனர். தனது ரசிகர் மன்றத்தை அஜீத் எப்போதோ கலைத்துவிட்டார். ஆனாலும் அவரது பெயரில் இணைய தள கணக்கு தொடங்கி ஒருவரை ஒருவர் தாக்கி ெமசேஜ் வெளியிடுகின்றனர். இந்த மோதலை தவிர்க்க வேண்டும் என இருதரப்பு ரசிகர்களிடமும்   மத்தியஸ்தம் செய்து வருகிறார் சிம்பு. ரசிகர்களின் மோதல் தங்களை பாதிக்காது என்பதில் அஜீத், விஜய் இருவருமே உறுதியாக உள்ளார்களாம்.

வழக்கமாக அஜீத்தோ, விஜய்யோ ஹீரோவாக நடிக்கும் படங்களில் காதலிப்பது, கல்யாணம் செய்வது என்பதோடு கிளைமாக்சை நிறுத்திக்கொள்வார்கள். இப்போது குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் அளவுக்கு இருவருமே தங்களது இமேஜில் மாற்றம் செய்துள்ளனர். ஏற்கனவே சிறுமிக்கு தந்தை வேடத்தில் அஜீத் நடித்துள்ளார். தற்போது விஜய் அதற்கு தயார் ஆகியிருக்கிறார். புலி படத்தில் சிறுமியின் தந்தையாக நடிக்க உள்ளார். இதற்காக பல்வேறு குழந்தைகளை ஆடிசன் செய்தனர். நடிகை மீனாவின் மகள் பொருத்தமாக இருப்பார் என்று சிலர் கூற உடனே அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் சிம்புதேவன் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். ஆனால் மீனா தரப்பிலிருந்து இதுவரை பதில் எதுவும் வரவில்லையாம்

No comments:

Post a Comment