இந்தியாவில் நடைபெறும் முத்தரப்புப் போட்டியில், ஆஸ்திரேலியா ஏ, தென் ஆப்பிரிக்கா ஏ ஆகிய அணிகளுடன் இந்தியா ஏ அணி விளையாடவுள்ளது. இதற்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது.
புஜாரா, இந்தியா ஏ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அபினவ் முகுந்த், விஜய் சங்கர், பாபா அபரஜித் ஆகிய மூன்று தமிழர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.
ரஞ்சி இறுதிப் போட்டியில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின. கர்நாடகா கோப்பையை வென்றது. இதனால் இந்தியா ஏ அணியில் இரு அணி வீரர்களும் அதிகம் இடம்பிடித்துள்ளார்கள்.
இந்தியா ஏ: புஜாரா (கேப்டன்), கேஎல் ராகுல், அபினவ் முகுந்த், கருண் நாயர், ஸ்ரேயாஸ் ஐயர், நமன் ஓஜா, விஜய் ஷங்கர், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, ஷர்துல் தாக்கூர், வருண் ஆரோன், அபிமன்யூ மிதுன், உமேஷ் யாதவ், ஸ்ரேயாஸ் கோபால், பாபா அபரஜித்.
No comments:
Post a Comment