ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சிறப்பு தூதராக உள்ள ஏஞ்சலினா ஜோலி தன் மகளுடன் சிரியா அகதிகள் முகாமிற்கு சென்று மக்களை சந்தித்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி தன் 10-வயது மகளான ஷிலோ ஜூலியுடன் துருக்கியில் உள்ள சிரியா அகதிகள் முகாமிற்கு சென்றார். அங்குள்ள மக்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் இது தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர் ”வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு போர் மற்றும் வன்முறையால் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்” என தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம்படி துருக்கியில் மட்டும் 1.6 மில்லியன் பேர் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment