நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை வென்றது.
இந்த இரு அணிகளிடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் இங்கிலாந்தின் செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
இதையடுத்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம், மார்ட்டின் கப்டில் நியூஸிலாந்தின் இன்னிங்ûஸ தொடங்கினர். மெக்கல்லம் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், கப்டில் நிலைத்து ஆடினார். வில்லியம்சன் 50 ரன்களுடனும், கப்டிலும் 67 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் ராஸ் டெய்லர் (47 ரன்கள்), எல்லியட் (35 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். 50 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் மழை பெய்ததால் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதோடு வெற்றி இலக்கும் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது 26 ஓவர்களில் 192 ரன்கள் எடுக்க வேண்டிய நிர்பந்தத்துடன் இங்கிலாந்து அணி களம் கண்டது. முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், நடுவரிசையில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ (83 ரன்கள், 60பந்து, 11 பவுண்டரி), சாம் பில்லிங்ஸ் (40 ரன்கள், 30 பந்து) ஆகியோர் அணியை வெற்றிக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தினர்.
பின்னர் வந்தவர்கள் தேவையான ரன்களை சேர்த்தனர். இதனால் 25-ஆவது ஓவரிலேயே இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை எடுத்து வெற்றியுடன் ஆட்டத்தை நிறைவு செய்தனர். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது.
அடுத்ததாக இங்கிலாந்து - நியூஸிலாந்து இடையிலான ஒரே ஒரு டி-20 ஆட்டம் மான்ஸ்செஸ்டரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment