ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கிறது பாகுபலி. இப்பட புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் அனுஷ்காவைவிட தமன்னாவுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. அனுஷ்காவை ஓரம் கட்டுவது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இயக்குனர் தரப்பில் விசாரித்தபோது, ‘இப்படம் 2 பாகமாக உருவாகிறது. முதல்பாகத்தில் தமன்னாவுக்குதான் அதிக சீன். சில காட்சிகளில் மட்டுமே அனுஷ்கா வருகிறார். இதனால் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதேசமயம் 2ம் பாகத்தில் தமன்னாவுக்கு காட்சிகள் குறைவு. அனுஷ்காவுக்கு அதிகம். அப்போது அனுஷ்காவுக்கு முக்கியத்துவம் தரப்படும்’ என்றனர். கதாபாத்திரத்துக்காக தமன்னா உடல் எடையை குறைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி தமன்னா கூறும்போது, ‘உடல் எடையை குறைக்கவில்லை மாறாக கூட்டித்தான் இருக்கிறேன். இது பலருக்கு தெரியாது. இதில் நடிக்கும் ஹீரோக்கள் பிரபாஸ், ராணா 6 அடிக்கும் மேல் உயரமானவர்கள். அவர்கள் அருகில் நான் நின்றால் சிறிய உருவில்தான் தெரிவேன். படத்தில் போர் வீராங்கனையாகவும் நடிக்கிறேன். அதற்கு ஏற்ப வெயிட் போட்டேன். அதன்பிறகுதான் ஓரளவுக்காவது என்னை வீராங்கனையாக ஒப்புக்ெகாண்டிருக்
கின்றனர்’ என்றார்.
கின்றனர்’ என்றார்.
No comments:
Post a Comment