சூது கவ்வும் படம் மூலம் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக மாறிய நலன் குமாரசாமி அடுத்து விஜய் சேதுபதி மற்றும் 'பிரேமம்' பட நாயகி மடோனா செபஸ்டியன் நடிப்பில் ஒரு ரொமாண்டிக் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படம் அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்று எடுக்கப்படும் கொரியா படத்தின் ரீமேக்காம். கொரியா நாட்டு படத்தின் ரீமேக் என்றால் மக்கள் இதை எதிர்மறையாக எண்ணக் கூடும் என்பதாலேயே படம் குறித்த தகவலை படக்குழு ரகசியமாக வைத்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
படத்தின் தயாரிப்பாளர் சிவி.குமார், சம்மந்தப்பட்ட கொரியா படக்குழுவிடம் சரியான உரிமம் பெற்று படத்தை உருவாக்கி வருகிறாராம். மேலும் படம் ரிலீஸ் ஆகும் தருவாயில் ஒரிஜினல் படத்திற்கு க்ரெடிட் கொடுக்கும் திட்டத்திலும் இருக்கிறார்கள் என்பதுதான் சிறப்பு.
சூது கவ்வும் படத்தை ரிலீஸ் செய்த ஸ்டூடியோ க்ரீன் இந்தப் படத்தின் தயாரிப்பிலும் இணைய உள்ளது. ’சூது கவ்வும்’ டீம் என்றாலே கண்டிப்பாக புதிதான விஷயம் தமிழுக்கு அறிமுகமாகும் என்பதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளன.
No comments:
Post a Comment