Friday, June 26, 2015

திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ‘பாகுபலி’ - தமன்னா


ருத்ரமாதேவி’, ‘பாகுபலிபடங்களில் அனுஷ்கா, ‘புலிபடத்தில் ஹன்சிகா இளவரசி வேடத்தில் நடித்துள்ளனர். இப்போது தமன்னாவும்பாகுபலிபடத்தில் இளவரசி வேடம் ஏற்றுள்ளார். ‘என் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது. 150 நாட்கள் ஷூட்டிங் நடந்து முடிந்த பிறகுதான் என்னை அழைத்தார் டைரக்டர் ராஜமவுலி. அப்படி என்ன பெரிய கேரக்டர் இருக்கப் போகிறது என்று நினைத்தேன்.

நடிக்க  நடிக்கத்தான் எனக்கான முக்கியத்துவம் தெரிந்தது. இளவரசி வேடத்துக்கு ஏற்ற காஸ்ட்யூம் மற்றும் நகைகள் அணிந்து என்னைப் பார்த்தபோது, இது நானா என்று ஆச்சரியமாக இருந்தது. ஷூட்டிங்கில் பிரமாண்டமான செட்டுகள், ஆயிரக்கணக்கான துணை நடிகர், நடிகைகளைப் பார்த்தபோது பயத்தில் என் உடல் நடுங்கியது. பிறகு வில்லனாக நடித்த ராணா வந்து என் பயத்தைப் போக்கி, நடிப்பு சம்பந்தமாக நிறைய டிப்ஸ் கொடுத்தார்என்று பூரிப்படைகிறார் தமன்னா.

No comments:

Post a Comment