டைரக்டர் ஹரி கையெழுத்திட்ட புகார் மனு ஒன்றை அவரது உதவி இயக்குனர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
சாமி, சிங்கம் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களை நான் இயக்கி உள்ளேன். டுவிட்டர் இணையதளத்தில் எனது பெயரில் போலி முகவரி தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அவதூறான தகவல்கள் எனது பெயரில் பரப்பப்படுகிறது. இது தனிப்பட்ட முறையில் எனக்கும், எனது சினிமா இயக்குனர் தொழிலுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போலி இணையதள முகவரியை முடக்கி, இதை எனது பெயரில் தொடங்கியவர் யார் என்று கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் உடனடி நடவடிக்கையை தொடங்கினார்கள். உடனடியாக ஹரி பெயரில் டுவிட்டரில் உள்ள போலி இணையதள முகவரி முடக்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள் யார் என்று விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment