Saturday, June 20, 2015

அஜித்துடன் கபீர்சிங்15மணிநேரம் சண்டை போட்டாரா?.




அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பிடிப்பில் அண்ணன் -தங்கை செண்டிமெண்ட் காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்ட இயக்குனர் சிறுத்தை சிவா, இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகளை படமாக்கி கொண்டு வருகிறார்.

அஜீத் மற்றும், பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வில்லன் கபீர்சிங் ஆகியோர் மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், ஆக்சன் காட்சிகளை தொடர்ச்சியாக படமாக்க வேண்டியதிருப்பதால், நேற்று தொடர்ந்து 15 மணி நேரங்கள் சண்டைக்காட்சிகளில் நடித்ததாகவும், வில்லன் கபீர்சிங் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தொடரந்து 15 மணி நேரங்களில் நடித்ததால் தனக்கு களைப்பாக இருந்தபோதிலும், அஜீத்துடன் நடிக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கின்றது' என்று கூறியுள்ளார்.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர்சிங், சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். அனிருத் இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்து இதுவரை இல்லாத அளவில் புதுவிதமான டியூன்களை கம்போஸ் செய்வதில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. ஏ.எம்.ரத்னம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment