தமிழ்ப்படங்களைக் காட்டிலும் ஆங்கிலப்படங்களை வாங்கி வெளியிடுபவர்களுக்கு நிச்சயம் இலாபம் கிடைக்கிறது என்பது அண்மைககாலமாக நடந்துகொண்டிருக்கிறது. அண்மையில் வெளியான ஜூராசிக்வேர்ல்டு திரைப்படம் நேரடித்தமிழ்ப்படங்களை விட அதிகவசூல் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தைத் தமிழகத்தில் திரையிட பல பெரியநிறுவனங்கள் போட்டிபோட்டன, யாருக்கும் தராமல் அவர்களே திரையிட்டனராம். நல்லவசூலையும் பார்த்திருக்கிறார்கள். அதனால், ஜூலை 3 ஆம் தேதியன்று கமல் நடிக்கும் பாபநாசம் படம் வெளியாவது உறுதியாகிவிட்டாலும்.
அதேநாளில் அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படமும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக ஹாலிவுட் படங்கள் வெளியாகும் முந்தினநாளே ஸ்பெஷல்பிரிமியர்ஷோ போடுவார்களாம். படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள் டிக்கெட் வாங்கிக்கொண்டு படம் பார்ப்பதுதான் ஸ்பெஷல்பிரிமியர்ஷோ.
இதுவரை தமிழ்நாட்டில் இதுபோன்று நடந்ததில்லை, இப்போது இந்தப்படத்தை வெளியிடும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனத்தினர், ஜூலை இரண்டாம்தேதி அதுபோன்ற பிரிமியர்ஷோக்களை நடத்தவிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் சுமார் நூறுதிரையரங்குகளில் இந்தப்படத்தை வெளியிடவிருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment