இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள். இந்த நாளில், அவருக்கு எதிரான ஹேஷ்டேக் ஒன்று, ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார் சிம்பு. அதில் அவர் கூறியதாவது:
‘ஒரு உண்மையான தல ரசிகனாக என்னுடைய வேண்டுகோள் - எதிர்மறை ஹேஷ் டேக்குகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது நம் நோக்கம் அல்ல.
அதேபோல், விஜய் அண்ணா ரசிகர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் - மற்றவர்களை நையாண்டி செய்து அவர்கள் மனத்தைப் புண்படுத்த வேண்டாம். ஒரு உண்மையான ரசிகராக உங்களுடைய நட்சத்திரத்துக்கு இதையா திருப்பித் தருகிறீர்கள்?
அனைத்து விதமான ரசிகர்களும் அடுத்தவர்களுடைய ரசிகர்களை வெறுத்து, தாழ்த்துவதை விட தங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தை மட்டும் ஆதரியுங்கள்.
ஒவ்வொரு ரசிகரும் எதிர்மறையான செயலை செய்வதை விடவும் நேர்மறை எண்ணங்களுடன் உங்கள் பலத்தையும் அன்பையும் வெளிப்படுத்துங்கள்.
என்னைக் கிண்டல் செய்தபோது அந்தச் சூழலை என்னால் பயன்படுத்தியிருக்கமுடியும். ஆனால், நாம் பக்குவத்துடனும் மனிதத்தன்மையுடனும் நடந்துகொள்வோம். அதுதான் நம் இயல்பு.
இந்தப் பிளவால் நம் சுய அடையாளத்தை இழந்து விடுகிறோம். ஜாதி, மதம், தேசம் இவற்றை எல்லாம் கடந்து மனிதர்களை முதலில் மதிப்போம்’ என்றார்.
No comments:
Post a Comment