தனுஷின் துள்ளுவதோ இளமை, சிம்புவின் காதல் அழிவதில்லை படங்கள் 2002ம் ஆண்டு ஒரேநாளில் வெளியாகி போட்டியை தொடங்கியது. இருவருக்கும் வெவ்வேறு ரசிகர் வட்டம் சேர்ந்தது. அடுத்து 2004ம் ஆண்டு தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சிம்புவின் கோயில் ஆகிய இருபடங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. தியேட்டர்களில் தோரணம் கட்டுவதில் தொடங்கி வெற்றி விழா கொண்டாடுவது வரை இருதரப்பிலும் போட்டி நிலவியது. இதைத் தொடர்ந்து மன்மதன், டிரீம்ஸ் இரண்டு படமும் ஒரேநாளில் திரைக்கு வந்து மோதலை அதிகரித்தது. ரசிகர்களின் மோதல்கள் ஹீரோக்களின் காதுகளுக்கு சென்றபோது ஒருவர் மீது ஒருவர் காழ்ப்புணர்ச்சி காட்டினர்.
ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்தபோது போட்டியை மறந்து நட்பு பாராட்டி நண்பர்களானார்கள். ஒரே மேடையில் இருவரும் தோன்றி தோள் மீது கைபோட்டு பாட்டு பாடி நடனம் ஆடும் அளவுக்கு தற்போது நெருங்கிய நட்பில் உள்ளனர். அடிக்கடி போனிலும் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு மோதல் திரைவடிவில் இருவரையும் நேருக்கு நேர் நிறுத்தி இருக்கிறது. தனுஷ் நடித்துவரும் மாரி, சிம்பு நடித்துள்ள வாலு இரண்டு படமும் ஜூலை மாதம் 17ம் தேதி ஒரேநாளில் ரிலீஸ் ஆகிறது. இது கோலிவுட் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது இவர்களுக்குள் நடக்கும் 3வது மோதல் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment