பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கேரள அரசு "ஹரிவராசனம்' விருதை வழங்கி கௌரவித்தது.
"ஹரிவராசனம்' விருதுடன் ரூ.1 லட்சத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் மாநில தேவஸ்தானத் துறை அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் சனிக்கிழமை வழங்கினார் என்று சபரிமலை ஐயப்பன் கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.
சபரிமலை எடுத்துரைக்கும் மத நல்லிணக்கத்தையும், உலக சகோதரத்துவத்தையும் தனது பாடல்கள் மூலம் பரப்பியதற்காக அதை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுக்கு எஸ்.பி.பி. தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
விருது பெற்ற பின் எஸ்.பி.பி. கூறியதாவது:
நான் பாடத் தொடங்கிய 50 ஆண்டுகளில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால், இந்த விருது மற்ற அனைத்தையும் விட முக்கியமானதாகும்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக ஐயப்பன் கோயில் விளங்குகிறது. ஐயப்பன் பாடல்களை ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பாடி இருக்கிறேன் என்றார் பாலசுப்ரமணியம்.
No comments:
Post a Comment