ருத்ரமாதேவி' பணிகள் இன்னும் முடிவடையாததால் ஜூன் 26ம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய படம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா, அல்லு அர்ஜூன், நித்யா மேனன், கத்ரீன் தெரசா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் படம் 'ருத்ரமாதேவி'. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வந்தார்.
நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்ற இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் இறுதிகட்டப் பணிகள் உள்ளிட்டவை மும்முரமாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜா சிம்பொனி ஆர்க்ஸ்ட்ராவைப் பயன்படுத்தி மிக ஆர்வத்துடன் அமைத்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. இப்படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் மூவிஸ் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்ததால் ஜூன் 26ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இப்படம் 3டி தொழில்நுட்பத்திலும் தயாராகி வருகிறது. இன்னும் அப்பணிகள் முடியவில்லை. ஆகையால் முழுமையாக பணிகள் முடிந்தவுடன் வெளியீட்டு தேதி அறிவிக்க இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment