நடந்து முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முடியாது என்று திருமணம் ரத்தானது குறித்து நடிகை த்ரிஷா பேட்டியளித்துள்ளார்.
நடிகை த்ரிஷாவுக்கும், படஅதிபர் வருண்மணியனுக்கும் இடையே நடப்பதாக இருந்த திருமணம் எதிர்பாராதவிதமாக ரத்தானது. இதுகுறித்து அவரது தாயார் உமா, வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, ‘த்ரிஷா கல்யாணம் நின்றுபோன விஷயத்தில் பெரியவர்கள் பலபேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதனால் அனைத்தையும் பேச முடியாது. பெரியவர்களின் மனது காயப்படுவதற்கு நாங்கள் காரணமாக இருக்க விரும்பவில்லை. சில விஷயங்கள் சரிப்பட்டு வரவில்லை என்றால் பிரிந்து விடுவது நல்லது’ என்று தெரிவித்தார். பிறகு த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வலம்வரும் ஊகங்களைக் கண்டால் வேடிக்கையாக இருக்கிறது. அதை விட்டு விடுங்கள் மக்களே! நான் சிங்கிளாக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
இப்போது தனது திருமணம் நின்றுபோனது பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
‘திருமணம் நின்று போனது உண்மைதான், ஆனால், அது எதிர்பாராத ஓன்று. நம் கட்டுப்பாட்டை மீறி அது நடந்தால் நாம் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும். நடந்து முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முடியாது. தற்போது என் கவனம் எல்லாம் புதிய படங்களில் தான் உள்ளது. தற்போது எனது தொழில் ஒன்றுதான் என் கண் முன் நிற்கிறது. கடவுளின் விருப்பப்படியே எல்லாம் நடக்கும். என்னைப் பற்றித் தெரிந்தவர்களூக்கு நன்கு தெரியும், நான் வெளிப்படையாகப் பேசுபவள் என்று. வாழ்க்கை எனக்கு என்ன கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன். நான் கடவுளின் குழந்தை. அவர் என்னைக் காப்பாற்றுவார்.’ என்றார்.
No comments:
Post a Comment