ஒரே இன்னிங்சில் துவக்க ஜோடியில் இரு வீரரும் 150க்கும் அதிகமான ரன்னை 2 முறை எடுத்த 3வது துவக்க ஜோடி என்ற பெருமையை ஷிகார் தவான் (173 ரன்), முரளிவிஜய் (150 ரன்) நேற்று பெற்றனர். இதற்கு முன் இவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு (2013, மொகாலி) எதிராக 150க்கும் அதிகமான ரன்னை எடுத்துள்ளனர். இந்த பெருமையை பெற்ற மற்ற ஜோடிகள் இலங்கையின் ஜெயசூர்யா, அட்டப்பட்டு மற்றும் தென் ஆப்ரிக்காவின் கிப்ஸ், ஸ்மித் ஆவர்.
இந்திய அணியில் கடந்த 10 ஆண்டில், ஒரே டெஸ்டில் துவக்க ஜோடியில் இரு வீரருமே சதம் அடிப்பது இது 5வது முறை. இதுவரை எந்த அணியின் துவக்க ஜோடியும் இதுபோல் சிறப்பாக விளையாடியதில்லை. அதிகபட்சம் ஆஸ்திரேலியா 4 முறை.
கடந்த 12 மாதத்தில் முரளி விஜய் டெஸ்டில் 1,034 ரன் எடுத்துள்ளார். இந்த காலகட்டத்தில் 1000 ரன்களை கடந்த ஒரே இந்திய வீரர், சர்வதேச அளவில் 7வது வீரர் ஆவார்.
No comments:
Post a Comment