Saturday, June 13, 2015

‘ஷாம் இடத்தை கைப்பற்றிய பிரசன்னா’



12பிபடம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஷாம். இப்படத்தை தொடர்ந்துலேசா லேசா’, ‘இயற்கைஉள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியானபுறம்போக்குபடம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஷாம் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவருடன் ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்திருந்தனர்.

ஷாம் தற்போதுஒரு மெல்லிய கோடுபடத்தில் அர்ஜூனுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும்மெட்ராஸ்படத்தில் நடித்த கலையரசனுடன் இணைந்துகால கூத்துஎன்னும் படத்திலும் நடித்து வந்தார். ஆனால், இப்படத்தில் இருந்து ஷாம் விலகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கால கூத்துபடத்தை இயக்கி வரும் நாகராஜனுக்கும் ஷாமுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஷாம் இப்படத்தில் இருந்து விலகியிருக்கிறார். தற்போது இவருடைய கதாபாத்திரத்தில் பிரசன்னாவை நடிக்க வைக்கவுள்ளனர். நட்பை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சிருஷ்டி டாங்கே மற்றும் தன்ஷிகா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்

No comments:

Post a Comment