Monday, June 15, 2015

மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கங்களை குவித்த உசைன் போல்ட்டின் வேகம் குறைகிறது?


00 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டது தன் வாழ்நாளின் மோசமான ஓட்டமே என்று கூறுகிறார் உசைன் போல்ட்

100 மீ, 200 மீ உலக சாதனைகளை தன் வசம் வைத்துள்ள ஜமைக்க அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ராண்டல் தீவில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார்.

6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற அதிவேக வீரரான உசைன் போல்ட்டின் 200 மீ உலக சாதனை 19.19 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அடிடாஸ் கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் உசைன் போல்ட் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டுள்ளார். போல்ட் முதலிடம் வருவதை ஒருவரும் தடுக்க முடியவில்லை என்றாலும் 2-வது இடம் பிடித்த ஸார்னெல் ஹியூஸ் 20.32 விநாடிகளில் வந்தது போல்ட்டின் வேகத்துக்கு விடப்பட்ட சவால் என்பதாகவே பார்க்கப்படுகிறது.

தனது ஓட்டம் பற்றி போல்ட் கூறும்போது, “எனது ஓட்டம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. என்ன நடந்தது என்று தெரியவில்லை; இது என்னுடைய மோசமான ஓட்டமே” என்றார்.

முன்னதாக கிங்ஸ்டனில் 200 மீட்டர் ஓட்டத்தில் 20.20 விநாடிகளிலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்ட்ராவாவில் 20.13 விநாடிகளிலும் இலக்கை கடந்துள்ளார்.

ஆனால் இந்தப் போட்டியில் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டது தனக்கு நிச்சயம் உடன்படானதல்ல என்கிறார் உசைன் போல்ட்.

ஆடவர் 100 மீ போட்டியில் டைசன் கேய் 10.12 விநாடிகளில் இலக்கை எட்டி வென்றார். 2-ம் இடம் வந்த ஜமைக்கா வீரர் நெஸ்டா கார்ட்டர் 10.15 விநாடிகள் எடுத்துக் கொண்டார்.

No comments:

Post a Comment