தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிப்படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். நடிப்பிலிருந்து விலகியதும் இசை அமைப்பாளர் ஆவார் என அவரது தந்தை கமல் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து இணைய தளத்தில் வெளியாகி இருக்கும் தகவலில், ‘ஸ்ருதி சில காலத்துக்கு நடிகையாக நீடிப்பார். பின்னர் அவர் இசை துறைக்கு மாறுவார். அவருக்கு இசையில் வலுவான பிடிமானம் இருக்கிறது. நடிகை ஆவதற்கு முன் அவர் இசை குழுவில் ஒரு அங்கமாக இருந்தார். மேலும் நல்ல பாடகி. இசை கம்போசிங் செய்யவும் தெரிந்தவர்’ என கமல் தெரிவித்திருக்கிறார்.பல பேட்டிகளில் நடிப்பை விட இசைக்கே தான் முதல் முக்கியத்துவம் தருவதாக ஸ்ருதியே கூறியுள்ளார். நடித்துக்கொண்டிருந்தாலும் இசை ஆல்பம் வெளியிடுவதிலும் படங்களுக்கு பின்னணி பாடுவதையும் அவர் தொடர்கிறார். அதே சமயம், சினிமாவில் இப்போது நடிகையாக பிரபலமாகி இருப்பதால் இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகே அவர் நடிப்பிலிருந்து விலகுவார் என ஸ்ருதிக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment