ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படம் இன்னும் முடிந்த பாடில்லை. ஆனால் அதற்குள் விக்ரம் கிட்டத்தட்ட 2 கதைகளை தேர்வு செய்துள்ளார்.அதில் அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் சொன்ன கதையை முதலில் உறுதி செய்தார். இக்கதையை ஐ படப்பிடிப்பு நடக்கும் போதே அவர் கூறினாராம்.அந்தப்படத்தை முதலில் தயாரிப்பாளர் தாணுவின் சகோதரர் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் விக்ரம் இந்த படத்தை ‘ஐங்கரன்’ நிறுவனம் தான் தயாரிக்க வேண்டும் என பிடிவாதமாக இருப்பதால் படம் அந்நிறுவனத்துக்கு கைமாறியதாம்.இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 20ம் தேதி தொடங்குவதாக கூறப்பட்டது.ஆனால் படப்பிடிப்புக்கு முன்பான வேலைகள் நடக்காததால் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.பத்து எண்றதுக்குள்ள படமும் திட்டமிட்டபடி நடக்காமல் இழுக்கிறது, அடுத்துத் தொடங்கவேண்டிய படமும் தாமதமாகிக்கொண்டே போகிறது, நம் விஷயத்தில் இவ்வளவு குழப்பங்களா? என்று விக்ரம் வேதனையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்து பெரும் புள்ளிகள்.
No comments:
Post a Comment