மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரு தொடர் வெற்றி படங்களை கொடுத்த கார்த்தி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'காஷ்மோரா'. ரெளத்திரம், இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை இயக்குனர் கோகுல் இயக்கி வரும் இந்த படத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தில் கார்த்தியின் அப்பாவாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வித்தியாசமான வேடத்தில் விவேக் நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை பிரவீண் படத்தொகுப்பு செய்கிறார்
கார்த்தி இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் கார்த்தியும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் தான் நடிக்கும் இரு கேரக்டர்கள் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது, என்று கூறிய கார்த்தி, இந்த படம் சரித்திர பின்னனி கொண்ட ஏராளமான சஸ்பென்ஸ் மற்றும் டுவிஸ்டுகள் கொண்ட படம் என்றும் கூறினார்.
இயக்குனர் கோகுல் குறித்து கருத்து கூறிய கார்த்தி, "கோகுலின் நகைச்சுவை உணர்வு அவருக்கும் அவருடைய படத்திற்கும் மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு நிமிடங்களையும் நான் மிகவும் ரசித்து பணிபுரிகிறேன்' என்று கூறியுள்ளார்
காஷ்மோரா" படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பல்கேரியா பறக்கவுள்ளனர்.

No comments:
Post a Comment