Friday, June 12, 2015

“பாவாடை தாவணி கட்டத்தான் பிடிக்கும்” க்யூட்டாக பேசிய ஹன்சிகா!


ஜெயம்ரவி - ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்ரோமியோ ஜூலியட்”. இமான் இசையில் அனிருத் பாடிய டண்டனக்கா பாடல் தெறி ஹிட் அடித்தது. கடைசியாக வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வரவிருக்கிறது.

ரோமியோ ஜூலியட் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில்  “ ஹன்சிகா படத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நிச்சயமாக ஹன்சிகாவிற்கு விருது கிடைக்கும் என்று ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளினார் ஜெயம்ரவி. தொடர்ந்து ஹன்சிகா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வேறு மொழிப்படங்களில் நடிக்கிறீர்களா

தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் மட்டும் தான் நடித்துவருகிறேன். அதிலும் தமிழில் தான் நடிக்கிறேன். தெலுங்கில் ஒரு படத்திற்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முடிவானதும் தெரிவிக்கிறேன்.

மாடல், ஹோம்லி இரண்டில் எப்படி நடிக்க பிடிக்கும்?

பாவாடை தாவணியில் நடிக்கத்தான் ரொம்ப பிடிக்கும். கிராமத்து கதைகளில் நடிக்கவேண்டும் என்றால் உடனே ஓகே சொல்லிடுவேன்.

திடீர்னு உடலை குறைத்துவிடுகிறீர்கள். அதற்கென்று தனியாக ஏதும் பயிற்சி எடுக்கிறீர்களா?

உடல் எடை கூடுவதையும், குறைவதையும் பற்றி கவலைப்படுவதே இல்லை. சாதாரண உணவுமுறைகளை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். தனியாக பயிற்சியெல்லாம் கிடையாது. உடல் எடை கூடினாலும் எனக்கு கவலையில்லை என்று கூறி முடித்தார் ஹன்சிகா.



No comments:

Post a Comment