அட்டகத்தி தினேஷ் நடித்து கடைசியாக வெளியான படம் தமிழுக்குஎண்ஒன்றைஅழுத்தவும். அதன்பின்னர் அவர் நடித்த வாராயோவெண்ணிலவே படம் வெளிவரும் என்று சொல்லப்பட்டது. அது இன்னும் வெளியாகவில்லை.
இவற்றிற்குப் பிறகு அவர் நடிக்கவிருக்கும் படங்கள் பற்றி எவ்வித அறிவிப்பும் வரவில்லையென்றாலும் அவர் சில கதைகளைக் கேட்டு அவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அதுபற்றிய விவரங்களைச் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். அவற்றில் கிருஷ்ணவேணிபஞ்சாலை படத்தை இயக்கிய தனபால் இயக்கும் படமும் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.
அந்தப்படத்துக்குப் பிறகு இயக்குநர் தனபால் எழுதிய கதைக்குப் பொருத்தமாக தினேஷ் இருப்பார் என்பதால் அவரை அணுகியிருக்கிறார். தினேஷூக்கும் கதை பிடித்துவிட்டதால் நடிக்கச் சம்மதம் சொல்லியிருக்கிறார். இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
அந்தப்படப்பிடிப்பு சிங்கப்பூரில் அதிகநாட்கள் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. கதைக்களமாகவே சிங்கப்பூர் இருக்கும் என்றும் படம் மிகவும் வித்தியாசமான தோற்றத்துடன் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். இப்படம் பற்றிய அறிவிப்பு வெகுவிரைவில் வரலாம்.

No comments:
Post a Comment