Sunday, June 14, 2015

மகிந்தவின் அரசியல் வாழ்க்கை அதிர்ச்சி ஜோதிடம்!


சோதிடரால் பதவியை இழந்த மகிந்த ராஜபக்சவிற்கு மீண்டும் வயிற்றில் புளியை கரைத்துள்ளார் பிரபல சோதிடர் ஒருவர். தற்போது அந்த சோதிடரே கதியென மகிந்த இருப்பதால் அவரது எதிர்வுகூறலால் மிக உடைந்து போயுள்ளாராம். அதுதவிர, எதிர்வரும் ஓகஸ்ட் 21ம் திகதி வரை எந்த பொதுமேடைகளிலும் ஏறக்கூடாதென தடையும் விதித்துள்ளார் சோதிடர்.
இந்த நாட்களில் மகிந்த மேடைகளில் ஏறினால் அவருக்கு பெரியளவிலான விபத்தொன்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அது மக்கள் மத்தியில் அவருக்குள்ள ஆதரவை மேலும் அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிடுமென்றும் சோதிடர் எச்சரித்துள்ளார். இதனாலேயே தனது ஆதரவாளர்கள் நடத்தும் கூட்டங்களின் பக்கம் மகிந்த தலையும் வைத்து படுக்காமல் இருக்கிறாராம்.
அரசியலில் அனாதைகளாகிவிட்ட விமல், வாசுதேவ, கம்மன்பில போன்றவர்கள் பல மாதங்களாக சந்திக்குசந்தி கூட்டம்போட்டு கூச்சலிடுகின்றபோதும், மகிந்த அந்தப்பக்கம் செல்லாததன் மர்மம் இந்த தகவல்களின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சில நாட்களின் முன் மாத்தறையில் நடந்த பேரணியில் மகிந்த மேடையில் ஏறுவார் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தபோதும், அவர் மேடைப்பக்கம் சென்றிருக்கவில்லை. கூட்டத்துடன் நின்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
இந்த சோதிடரில் மகிந்த தற்போது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோல்வியடைவார் என எதிர்வுகூறியிருந்தார்.
இந்த சோதிடரின் ஆலோசனைக்கமைவாக சில யாகங்களையும் மகிந்த செய்துள்ளார். சோதிடரின் ஆலோசனைக்கமைவாக சிறப்பு மந்திரதாயத்துக்கள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன.
விகாரைகளிற்கு சென்று மதவழிபாடுகளில் ஈடுபட வேண்டுமென்றும் சோதிடர் அறிவுறுத்தியுள்ளார். சோதிடரின் கருத்துப்படி மகிந்த 21 வருடங்களின் பின்னரே அதிகாரத்திற்கு வர முடியும். அப்பொழுது அவருக்கு 90 வயதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் சாத்தியத்தன்மையினால் கவலையடைந்துள்ள மகிந்த, தனது அதிகார ஆசையை ஒதுக்கி வைத்து விட்டு, மகன் நாமலிற்கு வழியேற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.


No comments:

Post a Comment